2020ஆம் ஆண்டின் டிஜிட்டல் வணிகத்தில் நாம் தவறவிடக் கூடாதவை

டிஜிட்டல் வணிகத்தில் நாம் எப்போதும் ஒரு அடி முன்னே இருக்க வேண்டுமென்றால், மாற்றங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கவும், அவற்றை ஏற்பதற்கு தயாராக இருக்கவும் வேண்டும்.

 

டிஜிட்டல் வணிகத்தில் நாளுக்குநாள் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நுகர்வோரின் தேவைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நாம் கையாளும் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, சென்ற வருடம் புதிதாகவும் பிரபலமாகவும் இருந்தது, இந்த வருடம் பழையதாகி விட்டிருக்கும். எனவே டிஜிட்டல் வணிகத்தில் நாம் எப்போதும் ஒரு அடி முன்னே இருக்க வேண்டுமென்றால், மாற்றங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கவும், அவற்றை ஏற்பதற்கு தயாராக இருக்கவும் வேண்டும்.


அந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டு டிஜிட்டல் வணிகத்தில், நாம் தவறவிடக்கூடாத தொழில்நுட்ப உத்திகளை இங்கே காணலாம்.


தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (Data Analytics and Artificial Intelligence)

டிஜிட்டல் வணிகத்தின் அனைத்து உத்திகளும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டவையே. எனவே மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி எனப்படும் தரவு பகுப்பாய்வு மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டும், வருங்காலங்களில் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. இவற்றின் மூலம் பெறப்படும் டேட்டாக்களை (தரவுகளை) கொண்டு, வாடிக்கையாளரின் விருப்பங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்த தகவல்கள் சந்தைப்படுத்துதலில் மிகவும் முக்கியமானவை.

அதே நேரத்தில் பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளை மனதில் கொண்டு, தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மாறிவரும் கூகுளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துதல்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பொறுத்தவரை கூகுள் தளம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. கூகுள் அட்வேர்ட்ஸ் பழைய முறையில் இல்லாமல், வாடிக்கையாளர் சார்ந்த சந்தைப்படுத்துதலைக் கொண்ட விளம்பர பிரச்சாரங்களை (Customer oriented ad campaigns) ஏற்றுக்கொள்கிறது.


இதனால் டிஜிட்டல்வழி சந்தை படுத்துபவர்கள் அனைத்து நிலைகளிலும், தங்கள் இலக்குகளை அடைய முடியும். கூகுள் மேற்கொண்டுள்ள வளர்ச்சி நிலைகளில் தானியங்கு ஏலம் (automated bidding), தானியங்கி விளம்பர உருவாக்கம் (automated ad creation) மற்றும் தானியங்கி இலக்கு நிர்ணயித்தல் (automated targeting) ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவை தவிர தற்போது கூகுள் தனது தேடல் தர வரிசைகளை மேம்படுத்துவதில், மொபைல் போன்கள் மூலமான தேடல்களை (Mobile Search) நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

இதனால் நிறுவனங்கள் தங்களுடைய வலைத்தளங்கள் (Website), மொபைல் வழி வலைத்தளங்கள் ஆகியவற்றின் வேகம், பயன்பாடு மற்றும் வலைத்தளங்களில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்களில் (Content) கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வீடியோ வழி விளம்பரங்கள் (Video Marketing)

டிஜிட்டல் வணிகத்தில் வீடியோ விளம்பரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றிலும் தற்போது நேரடி வீடியோ விளம்பரங்கள் (Live Video Ads) அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்களில் இத்தகைய வீடியோ விளம்பரங்கள் நிரம்பி வழிகின்றன.

ஒரு வீடியோவுக்கு முன்பாகவோ அல்லது வீடியோவின் உள்ளேயோ விளம்பரங்களை கொடுக்க முடியும். வலைத்தளங்களில் கொடுக்கும் தகவல்களை விட, அதிகமான தகவல்களை ஒரு நிமிட வீடியோவில் நம்மால் கொடுக்க முடியும். வலைத்தளங்களை விட வீடியோக்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

யூடியூபை எடுத்துக்கொண்டால், வீடியோக்களின் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் 100% அதிகரிக்கிறது. கோவிட்-9 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலத்தில், மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால், இணைய போக்குவரத்தில் 80% வீடியோக்களுக்கு உரியதாகிறது. மார்க்கெட்டிங்குக்காக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில், வீடியோக்களை இணைப்பது 200% வரை கிளிக்குகளை உயர்த்தி கொடுக்கும்.

எனவே நிறுவனங்கள், தாங்கள் திட்டமிட்டுள்ள 2020 ஆம் ஆண்டின் சமூக வலைதளங்களுக்கான உத்திகளில், வீடியோக்களை சேர்ப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ விளம்பரங்களை இடுதல், பணம் செலுத்தி மற்றவர்களின் வீடியோக்களில் நமது நிறுவன தயாரிப்புகளுக்கு ஆதரவாக பணியாற்றுதல் போன்றவையும் இதில் அடங்கும்.

சாட்பாட் (Chatbot)

மனிதனைப் போலவே வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்கின்ற சாட்பாட் ப்ரோக்ராம்கள், 2020ஆம் ஆண்டின் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இவை இயங்குகின்றன. இரவு, பகல் பாராமல் வாடிக்கையாளரின் கோரிக்கைகளுக்கு விடை அளிக்கவும், வலைத்தளத்திற்கு வருபவரை வழிநடத்தவும் இவை உதவுகின்றன. 2020இல் 85 சதவீத வாடிக்கையாளர் சேவை பணிக்கு சாட்பாட்களே பயன்படப் போகின்றன. 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளர் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் அளித்தல், இவற்றின் முக்கிய பயன்பாடுகளாக உள்ளன. இரவு பகல் பாராமல் தங்கள் கோரிக்கைகளுக்கு பதில் கிடைப்பதாலும், வேறுபாடுகள் எதுவும் இல்லாத சரியான தகவல்கள் பெறப்படுவதாலும், அவசரமில்லாத நிதானமான நடத்தையினாலும் இத்தகைய வேர்ச்சுவல் அசிஸ்டன்ட் தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர்கள் இடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. பல நிறுவனங்கள் இன்று இந்த தொழில்நுட்பத்தை கையாளுகின்றன.

சமூக வலைத்தளங்கள் (Social Media)

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), அலெக்சா (Alexa) போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர் செயலிகள், குரல்வழி தேடலுக்கு உறுதுணையாக உள்ளன. இதற்காக பல நிறுவனங்கள் ஆடியோ உள்ளடக்கங்களை (Audio Content) உருவாக்கி வருகின்றன. இந்த உள்ளடக்கங்களை, குரல் வழி தேடலில் பெரும்பாலும் மக்கள் பேசும் வார்த்தைகளை மனதில் கொண்டு எழுதுவது மற்றும் உரையாடல் வடிவில் எழுதுவது முக்கியமானது. குரல் தேடலுக்கான வழிகளை மேம்படுத்துவதால், நமது பிராண்ட் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும்.

இவ்வாறாக நாம் மேலே பார்த்தவை மட்டுமல்லாமல், மேலும் பல தொழில்நுட்ப உத்திகள், நாளுக்கு நாள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மாற்றம் ஒன்றே மாற்ற முடியாத விதி ஆகும். அதிலும் குறிப்பாக, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்றங்களை கண்டறிந்து ஏற்றுக் கொள்வது என்பது முக்கியமான வேலையாக இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள், உத்திகள், கருவிகள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருந்து, அவற்றை பழகிக் கொள்வது என்பது அவசியமாகிறது. இதை செய்பவர்கள் மட்டுமே போட்டியாளர்களை வென்று வெற்றிகரமாகத் தொழிலை நடத்த இயலும். அத்தகைய வெற்றியாளராக நீங்களும் மாற வாழ்த்துக்கள்!

 
Related Articles 
2020ஆம் ஆண்டின் டிஜிட்டல் வணிகத்தில் நாம் தவறவிடக் கூடாதவை
டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்
Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்
டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்
ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்
பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?19 views0 comments