Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்

Updated: Nov 17, 2020

covid-19 வைரஸ் தொற்றுக்கு பிறகுதான், தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனுபவ பூர்வமாக அறிந்து கொண்டுள்ளோம். அலுவலக வேலை, தொழில், பொருள்கள் வாங்குவது, கல்வி, இதர நடவடிக்கைகள் என்று தற்போதைய சூழலில், உலகம் முழுவதுமே டிஜிட்டல் மயமாக்கத்தின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 

 

டிஜிட்டல் வழி செல்லும் இந்தியா

இந்தியாவிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. உதாரணத்துக்கு, தற்போதைய covid-19 வைரஸ் பாதிப்பால், மக்கள் அனைவரும் லாக்டவுனில் இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டும் என்றால், அரசின் அனுமதி படிவத்தோடு தான் செல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அரசு அலுவலகங்களில் நிரப்பப்பட்ட படிவத்தோடு வரிசையில் காத்திருப்பது, மேலும் வைரஸ் தொற்றை அதிகமாக்கிவிடும். எனவே ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெறுவது தான் இதற்கு சிறந்த வழி. இவ்வாறு பலவகையிலும் ஆன்லைன் நமக்கு வசதியாக உள்ளது.

தற்போது உள்ள காலகட்டத்தில், எந்த பணி ஆனாலும் பாதுகாப்பாகவும், எளிதில் அணுகக் கூடியதாகவும், விரைவாக முடிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். டிஜிட்டல் வழி செயல்பாடு அரசு சார்ந்த ஆவணங்கள், கையொப்பங்கள் பெறுவது போன்ற தேவைகளையும், அலுவலகப் பணி, வீட்டு தேவைகள் போன்றவற்றையும் எளிதாக செய்து கொள்ள வழி செய்து இருக்கிறது. இதன்மூலம் மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருக்க முடிகிறது.

இந்திய வர்த்தகம் டிஜிட்டலுக்கு மாற வேண்டிய அவசியம்

covid-19 பாதிப்பு இந்திய வர்த்தக உலகத்தையும் விட்டுவைக்கவில்லை. சில்லரை விற்பனை, வாகன உற்பத்தி, பயணம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் மிகவும் கடினமான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வேலை இழப்பு, தொழில்கள் நலிவு, வருமானம் இன்மை போன்ற காரணங்களால், மக்களும் தங்களுடைய தேவைகளை மிகவும் சுருக்கி கொண்டு உள்ளனர். இதனால் வர்த்தக உலகமும் பாதிப்படைந்துள்ளது. தொழில் நிறுவனங்களால் இந்த ஆண்டு செயல்பட வேண்டி தீட்டியிருந்த திட்டங்கள் அனைத்தும் தள்ளிப் போடப்பட்டு உள்ளன. 

பொருளாதாரமும், தொழில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்தாலும், தற்போது நமக்கு வாய்ப்பாக அமைந்திருப்பது டிஜிட்டல் வழி வர்த்தகமே.

இத்தகைய சூழலில், வீட்டிலிருக்கும் நுகர்வோரை எளிதாக அணுகக்கூடிய வகையிலும், அவர்களின் வேலைகளை சுலபமாக்கும் வகையிலும், பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வகையிலும், நம்முடைய வியாபார உத்திகள் இருப்பது மிகவும் அவசியமானது. இதை உணர்ந்ததாலேயே, வர்த்தக உலகம் டிஜிட்டல் வழி செயல்பாட்டுக்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. பொறுமையாக படிப்படியாக டிஜிட்டல் உலகத்துக்குள் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த வர்த்தக உலகம்,  இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு  டிஜிட்டல் வழிகளால் நடக்கவிருந்த மாறுதல்களை,  இந்த covid-19 பாதிப்பு ஏற்பட்ட குறுகிய காலத்தில் நிகழ்த்தியிருக்கிறது. டிஜிட்டல் ஹெல்த்கேர், டிஜிட்டல் வழி கல்வி, ஆன்லைன் வணிகம் போன்றவை இதற்கு உதாரணங்கள். இதன் மூலம் தற்போதைய வாடிக்கையாளரையும், புதிய வாடிக்கையாளர்களையும் சிறப்பான வகையில் அணுக முடியும்.  எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும், அவற்றிலும் ஏதாவது ஒரு வாய்ப்பு நமக்கு நிச்சயம் இருக்கும். அது போல தான் covid-19 பாதிப்பால், பொருளாதாரமும், தொழில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்தாலும், தற்போது நமக்கு வாய்ப்பாக அமைந்திருப்பது டிஜிட்டல் வழி வர்த்தகமே. ஆசியாவில் ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்து, வன்பொருள் மற்றும் மென்பொருள் துறைகளில் இந்தியாவும் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் 50 சதவீத மக்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதிலும் வர்த்தகத் துறையை பொருத்தவரை, மரபு வழியை பின்பற்றும் நிறுவனங்கள், டிஜிட்டல் வழி மாற்றத்திற்கு அச்சப்படவே செய்கின்றன. மெதுவாகவே டிஜிட்டல் வழி மாற்றத்திற்கு தயாராகின்றன. இத்தகைய நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் வழிகாட்டி வருகின்றனர். டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலுக்கு, மக்களை எளிதாக சென்றடைய உதவும் தளங்கள் அவசியம். சமூக ஊடகங்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கின்றன. 

டிஜிட்டல் வர்த்தகத்தில் சமூக ஊடகங்களின் பங்கு

மக்கள் தங்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் அதிக அளவிலான நேரத்தை, பயனுள்ள வகையில் செலவழிக்கவும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை நல்லமுறையில் கடைபிடிக்கவும், தங்களிடம் இருக்கும் பணத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு கையாளவும், வீட்டிலிருந்தபடியே பணிகள் செய்யவும், டிஜிட்டல் மற்றும் ஆன்லைனை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆகையால் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுடனான வர்த்தகத்தை, டிஜிட்டல் வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் அமைத்துக் கொள்கின்றன. உலகம் முழுவதுமே டிஜிட்டல் பயன்பாடு அதிக அளவு வளர்ச்சியை தற்போது அடைந்துள்ளது. ஆகையால் சமூக ஊடகங்கள், கூகுள் ஆட்வேர்ட்ஸ், யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் விளம்பரங்கள் செய்து சந்தைப் படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் தங்களது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும். அதிக அளவு வாடிக்கையாளர்களை பெற முடியும். 

உள்நாட்டில் மட்டுமல்லாது, உலக அளவிலும் வாடிக்கையாளர்களை சுலபமாக ஈர்க்க முடியும். சரியான டிஜிட்டல் வழி மார்க்கெட்டிங் முறைகளால், ஒரு சில வாரங்களிலேயே உலக அளவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை டிஜிட்டல் வழி நிறுவனங்கள் பெற்றுவிடுகின்றன. வழிவழியாக சந்தைப்படுத்துவதற்கு செய்து வந்த செலவுகளை விட, டிஜிட்டல் வழி மார்க்கெட்டிங்கிற்கு ஆகும் செலவும் குறைவே.

வர்த்தகம் டிஜிட்டலுக்கு மாறுவதால் ஏற்படும் நன்மைகள்


மக்களின் தேவைகள், ஆசைகள், தொடர்பு கொள்ளும் முறைகள் போன்றவை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. சிறிய நிறுவனம் ஆனாலும், பெரிய நிறுவனம் ஆனாலும், தங்களுடைய புதிய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ளனர். இவற்றிற்கு ஏற்றார்போல நமது சந்தைப்படுத்துதலிலும் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே, நமது நிறுவனம் முன்னேற முடியும். தொழிலை டிஜிட்டல் மயமாக்குவதால், நிறுவனங்களில் செயல்திறன் மற்றும் உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும் சந்தைப்படுத்துதலில் பல புதிய களங்களை சந்திக்க முடிகிறது. டிஜிட்டல் மயம் ஆவதால் ஏற்படும் நன்மைகளை இங்கே காணலாம். உற்பத்தி திறன் அதிகரித்தல் தொழில் டிஜிட்டல் மயமாக்கபடுவதால், உற்பத்தி திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை சரியான அளவில் மதிப்பிட முடிகிறது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் சரியாக ஆராய்ந்து, அதில் இருக்கும் சிக்கல்கள், முரண்பாடுகள், சவால்கள் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் மயப்படுத்துவதால், உற்பத்தி மற்றும் சந்தை படுத்துதலுக்கு ஆகும் நேரத் தடைகள் குறைகின்றன. வர்த்தகத்தை திறமையாக நடத்தி செல்ல டிஜிட்டல் மயமாக்கல் உதவுகிறது. செலவு குறைதல் டிஜிட்டல் மயமாக்கல் நிறுவனத்தின் செயல்முறைகளை மேம்படுத்தி, செயலாற்ற ஆகும் செலவுகளில் 20 சதவீதம் வரை குறைக்கிறது. உற்பத்தி மற்றும் வணிக செயல்முறைகளை திறமையாக ஆராய்ந்து, செயல்படுத்தி, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி செலவை நிர்வகிக்கிறது.  இதனால் வருவாயை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் நிறுவனங்களால் முடிகிறது.

வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தல் டிஜிட்டல் மயமாக்கல் வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு நிறுவனத்துடன் நிறைவான அனுபவத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்ப உதவியால் தற்போதுள்ள வாடிக்கையாளர்களிடமும், புதிய வாடிக்கையாளர்களிடமும், அழுத்தமான பிணைப்பை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்கள், வலைத்தளம் போன்றவை வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் நமது இருப்பை வாடிக்கையாளர்களிடம் காட்டுகின்றன.  செயல்முறைகளை எளிதாக்குதல் டிஜிட்டல் மயமாக்கல், வணிகத்தை சரியான முறையில் நடத்த செய்து, நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. நிறுவனம் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் நோக்கத்தை சீரமைக்கிறது. வழி முறைகளை உருவாக்கி, செயல் திறனை மேம்படுத்துகிறது. பெறப்படும் தகவல்கள், சரியான முடிவு எடுப்பதற்கும், அதைத்தொடர்ந்து செயல்படுவதற்கும் வழிவகுக்கின்றன. புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் டிஜிட்டல் மயமாக்கல் புதிய சந்தை வாய்ப்புகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. வணிகத்தை மேம்படுத்துவதற்கு தூரம் ஒரு தடையாக இருந்து வந்தது. ஆனால் தொழில்நுட்ப எழுச்சிக்குப் பிறகு, உலகமே சுருங்கி விட்டதால் தொலைவு ஒரு பொருட்டல்ல. சரியான டிஜிட்டல் தகவல்தொடர்பு உத்தி நம்மிடம் இருந்தால், புதிய சந்தை வாய்ப்புகளை மிக எளிதாக பெற முடியும். பிராண்டை வலுவாக்குகிறது டிஜிட்டல் மயமாக்குவதால், நிறுவனத்தின் பிராண்ட் மேலும் வலுவடைகிறது. மரபுவழி சந்தைப்படுத்துதலை விட, டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலால், ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கானவர்களை நமது பிராண்ட் சென்றடைகிறது.

டிஜிட்டல் மயமாக்குவதை திறமையாக செயல்படுத்துவது எப்படி?

நிறுவனத்தின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும், உற்பத்தியை பெருக்குவதற்கும், டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியம். தற்போதைய சூழலில் டிஜிட்டல் மயமாக்கல் நம்முடைய விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல. நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்றால், டிஜிட்டல் மயமாக்க வேண்டியது கட்டாயமாகின்றது. covid-19  வைரஸ் தொற்று பாதிப்பு பிறகு, உலகம் அதிவேகமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றது. தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது. நுகர்வோரின் பார்வையும் தேவைகளும் இதற்கேற்ப மாறிவருகின்றன. இந்த புதிய மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். நுகர்வோர், தானியங்கி தகவல் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தொடர்பு இவற்றின் அடிப்படையிலேயே, நமது நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றம் இருக்க வேண்டும். காகித பயன்பாட்டை குறைத்து, அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் படுத்துவது, டிஜிட்டல் உலகில் நமது இருப்பு போன்றவையெல்லாம் உண்மையான டிஜிட்டல் மயமாக்கல் இல்லை. உண்மையான டிஜிட்டல் மாற்றம் என்பது, நமது நிறுவனத்தின் அனைத்து செயல்களிலும், நடவடிக்கைகளிலும் இருக்க வேண்டும். நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, முழுமையான ஆய்வை மேற்கொள்வதும், அதில் தொழில்நுட்பம் எவ்வாறு சாதகமான புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவதும் இதில் முக்கியமாகும். 

டிஜிட்டல் மயமாக்கல் தற்போது வர்த்தகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள்


தொழில்நுட்பம் அனைத்து வகையிலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கை முறை, பயணங்கள், நமது பேச்சு உட்பட அனைத்தும் மாறியுள்ளன. வர்த்தக உலகத்திலும் இதனால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பணி மற்றும் தொழிலில் டிஜிட்டல் மயமாக்கல் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. தொடர்ந்து மீட்சிக்கும், மாறுதலுக்கும் உட்படுகிறது. எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை கீழே காணலாம். செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு வணிக உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்களின் செயல்பாடுகளை தானியங்கி வகையில் உருவாக்க இது பெரும்பாலும் பயன்படுகிறது. தகவல்களை ஆய்வு செய்தல், வழி முறைகளை உருவாக்குதல், வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவை இதன் உதவியோடு நடக்கின்றன. வசதியான வேலை நேரம் மற்றும் வேலை முறைகள் டிஜிட்டல் மயமாக்குதலால், எங்கு மற்றும் எப்போது வேலை செய்யலாம் என்று முடிவெடுத்துக் கொள்ள முடிகிறது. தேவையான டேட்டாக்கள் மற்றும் தகவல்கள் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், டிஜிட்டல் சாதனங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த டேட்டாக்கள் மற்றும் தகவல்களை, நாம் எந்த நேரத்திலும் அணுகவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தொழில்நுட்ப செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் நமது வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப, வேலை நேரத்தை நிர்ணயித்துக் கொள்ள வழி செய்கின்றன. இதனால் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்தாமல், அவர்களிடத்தில் இருந்தபடியே பணிகளை செய்ய அனுமதிக்கின்றனர். ஊழியர்களும் பணிகளை முடித்து, அவற்றை தொழில்நுட்ப உதவியோடு இணையத்தின் வழியே நிறுவனத்துக்கு அனுப்பி விடுகின்றனர்.  புதுமை டிஜிட்டல் மயமாக்கத்தால், தகவல்களை எலக்ட்ரானிக் உபகரணங்களில் பதிவு செய்வது மட்டுமல்லாமல், அவற்றை சிறந்த முறையில் உபயோகிக்கவும், புதிய வழிகளை கண்டறிந்து மேம்படுத்தவும் முடிகிறது. சந்தைகளில் பல புதிய மற்றும் புதுமையான வழிமுறைகள் உள்ளன. அவற்றை வர்த்தகத் துறையில் எளிதாக புகுத்த முடிகிறது. தொழில்நுட்பத்தில் புதுமைகள் புகுத்தப்படுவதால், நிறுவனங்கள் பல புது யோசனைகளோடு வாடிக்கையாளர்களை அணுக முடிகிறது. பல பார்வையாளர்களை அடைய முடிகிறது. வேலைகளை சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த கூடியதும், மகிழ்ச்சி தரக்கூடியதுமான சேவையை கொடுக்க முடிகிறது. தகவல் தொடர்பு தகவல் தொடர்பு நமது வாழ்வில் மிக முக்கியமானது. சரியான தகவல் தொடர்பு இல்லாமல், வணிகத்தில் சரியான உற்பத்தியை பெருக்க முடியாது. தகவல் பரிமாற்றத்தில்  குறைவு ஏற்படும்போது, தவறான புரிதல்களும், முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. டிஜிட்டல் மயமாக்கத்தில் நிறுவனம், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள பலவித கருவிகள் உள்ளன. தகவல்களைப் பறிமாறிக் கொள்ள பல தளங்கள் உள்ளன. முக்கியமாக தேவைப்படும் ஆவணங்கள் எளிதாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் போன்றவை மிக எளிதாக டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னேற விரும்பும் எந்த நிறுவனத்திற்கும், டிஜிட்டல் மாற்றம் முக்கியமானது. இன்றைய வர்த்தக உலகில் போட்டி நிறுவனங்களை வெற்றிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைக் நிறைவேற்றவும், டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். டிஜிட்டல் மயமாக்கல் இல்லை என்றால், நம்முடைய வணிகம் வளர்ச்சி பெறாது. தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் புதுமைகளைப் புகுத்த, டிஜிட்டல் மாற்றங்களின் நன்மைகளை ஏற்றுக் கொள்வோம்.Related Articles 
டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்
Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்
டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்
ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்
பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?


61 views0 comments