டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?

Updated: Nov 17, 2020

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் சிறந்த வல்லுனர்களை நியமிக்கும் போது, அவர்களின் வழிகாட்டுதல் மூலம் புதிய வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்க முடியும்.

 

எந்த ஒரு செயலையும் நாமே முயன்று செய்வதற்கும், அந்த செயலில் நிபுணத்துவம் பெற்றவர்களின் வழிகாட்டுதலோடு செய்வதற்கும், வித்தியாசங்களும் பலன்களும் அதிகம் உள்ளன. அந்த வகையில் டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதல் எனும் டிஜிட்டல் மார்க்கெட்டிங், மிகப்பெரிய பரந்து விரிந்த கடல் போன்றது. இதில் ஏற்ற இறக்கங்கள், மாற்றங்கள் ஆகியவை நாளுக்கு நாள் நடைபெறும்.

ஒரு வணிகத்தை ஆரம்பித்து, அதை சரியான பாதையில் கொண்டு செல்வது என்பது மிகவும் சவாலானது. பெரும்பான்மையான வணிகங்கள் ஆரம்பித்த முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் கைவிடப்படுகின்றன.

தொழில் முனைவோர் என்றுமே கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள். புதிய திறன்களை கற்றுக்கொள்வதில் சிறப்புடன் செயல்படுவார்கள்.  ஆகையால், சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டிய சந்தைப்படுத்துதல் முறைகள் அனைத்தையும், நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்ற நமது நம்பிக்கை உண்மைதான். அதேநேரம் தற்போதைய நவீன மார்க்கெட்டிங் பல சிக்கல்கள் நிறைந்தது. அதற்கு பலவிதமான திறன்களும், ஆழமான அறிவும் தேவைப்படுகிறது. இவற்றை நாம் புதிதாக கற்றுத் தேர சில ஆண்டுகள் தேவைப்படும். இப்படியாக டிஜிட்டல் சந்தைபடுத்துதல் முறைகளை முழுமையாக கற்றுத் தேறும் வரையில், நமது வணிகத்தை நிறுத்தி வைக்க இயலாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

சிறு வணிக உரிமையாளர்களைப் பொறுத்தவரை, தங்களது வணிகத்தை கையாள வேறொருவரை ஈடுபடுத்துவதற்கு விரும்புவதில்லை. அத்தகைய செயலால் அவர்களது வணிகத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது தெரிந்தும் கூட, தாங்களாகவே எல்லாவற்றையும் செய்ய பழக்கப்பட்டு விட்டனர். சந்தைப்படுத்துதல் முயற்சிகளில் தாங்களே செயல்பட விரும்புகிறார்கள். வணிகத்தின் ஆரம்ப காலங்களில் இது சாத்தியமாக தோன்றலாம். நாளடைவில் வணிகத்தை நடத்துவதில் கவனம் செலுத்தவும், நேரத்தை பயனுள்ள வகையில் நிர்வகிக்கவும், செயல் திறனை அதிகரிக்கவும், சந்தைப்படுத்துதலில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது வணிகத்தை சந்தைப்படுத்துவதற்கான வேலைகளில், நாமே ஈடுபட வேண்டுமா? அல்லது டிஜிட்டல் சந்தைப்படுத்துதலில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனரை ஈடுபடுத்த வேண்டுமா? என்று நமக்குள் கேள்வி எழும்போது, வல்லுனரை ஈடுபடுத்தி வெற்றி காண்பதே சரியான வழி என்பதற்கு, இங்கே சில காரணங்களை பார்ப்போம்.

Read about டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்

நேரமும் பணமும் மிச்சப்படுகிறது

வணிக உரிமையாளர்கள் டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் தேர்ந்த வல்லுனர்களை நியமிப்பதற்கு தயக்கம் காட்டுவதற்கு, முக்கியமான காரணமாக நினைப்பது செலவு. அவர்களே சமூக வலைத்தளங்களில் எழுதுவது, சந்தைப்படுத்துவது போன்றவற்றை செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எழுதப்படும் உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்கள் செய்வது போன்றவற்றிற்கு செய்யும் முதலீடு, பெரும்பாலான நேரம் எந்த வருமானமும் இன்றி வீணாகிறது. டிஜிட்டல் சந்தைப்படுத்துதலில் தேர்ந்த வல்லுநர்களை நியமிப்பதற்கு ஆகும் செலவு, அந்தந்த நபர்களின் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடும். அதேநேரம் நமது அணியில் டிஜிட்டல் சந்தைப்படுத்தும் நிபுணர் இருந்தால், மார்க்கெட்டிங் முதலீடுகளில் வருமானம்  அதிகரிக்கிறது. மேலும் டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் வல்லுநர்களுக்கு, பல நிறுவனங்களுடன் தொடர்புகள் உள்ளதால், அந்த அனுபவம் பயனுள்ள பல உத்திகளை மேம்படுத்தி தர உதவுகின்றது. டிஜிட்டல் சந்தைபடுத்துதல் வல்லுனர்களால் குறைந்த பணத்தில் அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்க இயலும். ஆகையால் நமது வணிகத்தில் சந்தைபடுத்துதல் வல்லுனரை நியமிப்பது, ஆரம்பத்தில் அதிக முதலீடாக தோன்றினாலும், அது பல நீண்ட காலத்திற்கு நமது பணத்தை உறுதியாக மிச்சப்படுத்தும்.

கற்பதற்கும் முன்னேறுவதற்குமான வாய்ப்பு

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி மேலும் நுணுக்கமாக தெரிந்துகொள்ள, வல்லுனரை நியமிப்பது ஒரு வாய்ப்பாக அமையும். நமது போட்டியாளர்களுக்கு தெரியாத நுட்பங்களையும், நுணுக்கங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி நாமே சொந்தமாக தெரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகும். ஆனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் சிறந்த வல்லுனர்களை நியமிக்கும் போது, அவர்கள் வாயிலாக நாம் வெகு சீக்கிரமாகவே டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலை தெரிந்துகொள்ள முடியும். அவர்களின் வழிகாட்டுதல் மூலம் புதிய வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்க முடியும். தற்போதைய வாடிக்கையாளர்களை, மற்றவர்களுக்கு நம்மை பரிந்துரைக்க செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள முடியும். சமூக வலைத்தளங்களில் சிறப்பாக செயலாற்ற முடியும்.


Read about ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்

நவீன சந்தைப் படுத்துதல் உத்திகளை கையாளுதல்

நவீன டிஜிட்டல் சந்தைப்படுத்துதலில் ஏராளமான நுட்பங்கள், கருவிகள், திறன்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. ஆகவேதான் டிஜிட்டல் சந்தைப்படுத்துதலில் வெவ்வேறு பணிகளை கையாளும், வெவ்வேறு திறன்களைக் கொண்ட நிபுணத்துவம் பெற்றவர்கள், குழுவாக செயல்படுகின்றனர். வணிக உரிமையாளர்கள், வணிகத்தை முழுமையாக கவனிக்க போதிய நேரம் இல்லாமல் இருக்கும்போது, சந்தைப்படுத்துதல் திறன்கள் பெற்றிருந்தாலும், அவற்றை தனிநபராக நிர்வகிக்க இயலாது. ஏனெனில் எளிமையான சந்தைப்படுத்துதல் உத்திகளை செயல்படுத்துவதற்கு கூட, கீழ்கண்ட படிநிலைகள் தேவைப்படுகின்றன:

தரமான ஈர்க்கக்கூடிய உள்ளடக்கம் (Content)

உள்ளடக்கம் (Content) நவீன டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் உத்திகளில் மிகவும் முக்கியமானது. ஒரு நிறுவனத்தின் தொழிலை நிலை நிறுத்துவதற்கும், வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்வதற்கும், தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை பகிர்வதற்கும், தேடுபொறிகளை ஈர்க்கக்கூடிய முக்கியமான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கும், உள்ளடக்கம் அவசியமானது. இன்றைய பார்வையாளர்கள் தாங்கள் படிக்கக்கூடிய உள்ளடக்கங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறார்கள். எனவே கீழ்கண்ட விதிகளுக்கு உட்பட்டு, நமது உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும். 1. எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இல்லாமல் உள்ளடக்கம் எழுத வேண்டும். 2. கீவேர்டு எனப்படும் முக்கியமான வார்த்தைகளுக்கு பொருத்தமான வகையில் உள்ளடக்கம் இருக்கவேண்டும். 3. 1000 முதல் 2000 வரையிலான வார்த்தைகள் கொண்டதாக எழுதப்படும் உள்ளடக்கம் இருக்க வேண்டும். 4. கொடுக்கப்படும் தகவல்களை நன்கு ஆராயப்பட்டு துல்லியமானவையாக இருக்க வேண்டும். உள்ளடக்கங்களைக் கொண்டு செய்யப்படும் மார்க்கெட்டிங்கின், முதன்மையான நோக்கம் என்னவெனில், நமது வலைத்தளத்துக்கான போக்குவரத்தை அதிகரிப்பது மற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மீதான வாடிக்கையாளரின் ஆர்வத்தை, நீண்டகாலம் தக்கவைப்பதும், அவர்களின் நம்பிக்கையை வெல்வதும் ஆகும்.

திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த சந்தைப்படுத்துதல் வல்லுனர்களுக்கு, நமது இலக்குக்காக பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளடக்கங்களை எவ்வகையில் எழுதுவது என்பது நன்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் பார்வையாளர்களுக்கான உள்ளடக்கங்கள் எழுதுவதற்கு, தனிப்பட்ட திறன்கள், பயிற்சி மிகவும் தேவை. வணிக உரிமையாளர்கள் வணிகத்தையும் நிர்வகித்து, இத்தகைய உள்ளடக்கங்களையும் எழுதுவதையும் நிர்வகிப்பது என்பது இயலாத ஒன்று.

உள்ளடக்கங்களை பார்வையாளர்களுக்கு சரியான வழியில் கொண்டு சேர்ப்பது

உள்ளடக்கங்களைக் கொண்ட சந்தைப்படுத்துதலில், வணிக உரிமையாளர்கள் நேரத்தையும், உழைப்பையும் முதலீடு செய்தால், தரமான உள்ளடக்கங்களை எழுத்து வடிவில் கட்டுரைகளாகவும் (Articles) அல்லது ப்ளாக் (Blog) வடிவிலோ உருவாக்க முடியும். ஆனால், சந்தைப்படுத்துதல் வல்லுனர்களுக்கு மட்டுமே அத்தகைய உள்ளடக்கங்களை, இலக்குக்கான பார்வையாளர்களுக்கு எந்தெந்த வழிகளில் கொண்டு சேர்ப்பது என்பது தெரியும். சிறந்த உள்ளடக்க சந்தைப்படுத்துதல் என்பது கீழ்க்கண்ட வழி நிலைகளை கொண்டுள்ளது:

1. நமது வணிகத்தை பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் (Videos) மற்றும் பயிற்சி வீடியோக்கள் (Tutorials) 2. பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய டிஜிட்டல் ஆடியோ பதிவுகள் (Podcasts) மற்றும் நேரடி ஒளிபரப்புகள் (Live stream) 3. இன்போகிராஃபிக் (Info-graphics) மற்றும் இயங்கு படங்கள் (Animation) 4. ஒயிட் பேப்பர் (White Paper) மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் (Research Articles) இந்த வகையான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கு, பல்வேறு திறன்கள், மற்றும் மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதல் வல்லுனர்களிடம் இதற்கான அத்தனை கருவிகளும் உள்ளன.


சமூக வலைத்தளங்களை எளிதாக கையாளுதல்

நவீன டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில், சிறு வணிக உரிமையாளர்களுக்கு சமூக ஊடக தளங்கள் மிக சிறந்த வாய்ப்பாகும். ஈடுபாட்டை உருவாக்குவதற்கும், பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நமது தயாரிப்புகள் பற்றிய தகவல்களை சென்று சேர்ப்பதற்கும், நம்முடைய இலக்குக்கான பார்வையாளர்களை அடைவதற்கும், அவர்களை இணைப்பதற்கும், சமூகத் தளங்கள் சரியான வழியாகும். அதே நேரத்தில் சமூகவலைத்தளங்கள் மிகவும் சிக்கலானவை. அதிக போட்டிகள் கொண்டவை. ஒரு நாளுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளம்பரங்களை சமூக தளங்களில் வெளியிடுகின்றனர். அவற்றின் நடுவே நமது விளம்பரங்கள் மக்களை சரியான வழியில் சென்றடைய, தரமான உள்ளடக்கங்களை உருவாக்கும், ஆக்கபூர்வமான டிஜிட்டல் சந்தைபடுத்துதல் வல்லுநர்கள் தேவை. நமது இலக்குக்காண பார்வையாளர்கள் யார்? அவர்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு புரிந்து கொண்டு, பகுப்பாய்வு செய்யும் திறன் பெற்ற டிஜிட்டல் வழி சந்தைப்படுத்தும் வல்லுநர்கள், நமது சமூக ஊடக சேனல்களை சிறந்த வழியில் பயன்படுத்துவதன் மூலமும், வாடிக்கையாளர்கள் கவனத்தை நாம் பெற நமக்கு உதவுவார்கள். 

பிராண்ட் மற்றும் வலைதள உருவாக்கம்

ஒரு வணிகத்தை பொறுத்தவரையில், நன்கு கவனமாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் மற்றும் பிராண்ட் இல்லையென்றால், சந்தைப் படுத்துவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வி அடையும். இணையதளம் என்பது நமது அனைத்து சந்தைப்படுத்துதல் முயற்சிகளுக்கும் அடிப்படையானது. நமது இணையத்தளமானது, அனைவரும் எளிதாக அடையக்கூடிய வகையிலும், மொபைல் போனில் கூட எளிதாக பயன்படுத்தும் வகையிலும், எல்லா தளங்களில் இருந்தும் எளிதாக சென்றடையும் வகையிலும், SEO எனப்படும் தேடுபொறிகள் எளிதில் கண்டறியும் வகையிலான முக்கிய வார்த்தைகள் கொண்டதாகவும், அழகாகவும், பார்ப்பவர்கள் மகிழ்ச்சி கொள்ளும் விதத்திலும், தேவையான தகவல்கள் அடங்கியும் இருக்க வேண்டும். டிஜிட்டல் சந்தைபடுத்துதல் வல்லுநர்கள் கீழ்கண்ட அனைத்தையும் மனதில் கொண்டு, இணையதளத்தையும் பிராண்டையும் வடிவமைப்பார்கள்.

இணையதள வடிவமைப்பு மற்றும் பிராண்டிங்கை செயல்படுத்துவதில், மேற்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளும்போது, ஆன்லைன் நம்முடைய இருப்பை சிறப்பானதாக மாற்றுகிறது. மேலும் இலக்குக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. வணிக உரிமையாளர்கள் தங்கள் தொழிலை பற்றியும், தயாரிப்பு மற்றும் சந்தையை பற்றியும் அறிந்திருந்தாலும், பிராண்டிங் செய்யும்போது தங்களை சிறப்பாக நிலை நிறுத்துவதில் தவறிவிடுகின்றனர். இத்தகைய அணுகுமுறை மற்றும் பிராண்டிங் உத்தி வெற்றியைக் கடினமானதாக மாற்றிவிடும்.

சந்தைப்படுத்துதல் உத்திகளை பகுப்பாய்வு செய்தல்

நவீன சந்தைப்படுத்துதல் உத்திகள் மாறும் தன்மை உடையவை. சந்தையின் நிலமைகள், தேடுபொறிகளின் விதிமுறைகள், இலக்குக்கான பார்வையாளரின் விருப்பங்கள் போன்ற காரணிகளுக்கு ஏற்றவாறு அவை மாற வேண்டும்.  இன்று வெற்றிகரமானதாக தோன்றும் சந்தைப்படுத்துதல் அணுகுமுறை, ஆறு மாதங்கள் கழித்து அதே நிலையில் இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆகையால்தான் சந்தைப்படுத்துதல் வல்லுநர்கள் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து உத்திகளையும், தொடர்ந்து பகுப்பாய்வு செய்து வருவார்கள். அவர்கள் உற்று நோக்கும் சில பகுப்பாய்வு அறிக்கைகளை இங்கே காணலாம். 1. இணையதள செயல்பாடுகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, பார்வையாளர் வருகை தரும் காலம், இணையதளத்தில் அதிகம் பார்க்கப்படும் பக்கங்கள் போன்ற தகவல்கள் இணையதளத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் 2. தேடுபொறிகள், சமூக ஊடக தளங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் கட்டண விளம்பரங்களின் செயல்திறனை கண்காணிக்கின்றனர். 3. சமூக ஊடக தளங்களில் பெறப்படும் பதிவுகள் (Posts), கருத்துக்கள் (Comments), விருப்பங்கள் (Likes), பகிர்வுகள் (Shares), விருப்பமின்மைகள் (Unlikes) போன்ற தரவுகளை அவ்வப்போது சரி பார்த்து, சமூக ஊடக தளங்களில் உத்திகளை மாற்றம் செய்வர். இத்தகைய பகுப்பாய்வுகள், உள்ளடக்கம் உருவாக்குதல், சந்தைப்படுத்துதல், விளம்பரங்கள், சமூக ஊடக தளங்களில் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள், போன்றவற்றைத் தெளிவாக திட்டமிட உதவும். ஒரு வணிக உரிமையாளர் இத்தகைய பகுப்பாய்வுகளின் அனைத்து அம்சங்களையும் அவரே கையாள்வது கடினமானது. மேலும், வணிக உரிமையாளர்களுக்கு வணிகத்தில் பல பொறுப்புகள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படும் நிலையில், சந்தைப்படுத்துதலையும் அவர்களே கையாளுவது, கூடுதல் சுமையாகவே இருக்கும். தாங்களே சந்தைப்படுத்துதலை கையாள்வது மலிவானதாக தோன்றினாலும், அது வணிகத்தில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்க கூடும். நமக்கு கணிசமான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, நமது கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்ற பணிகளில், கவனம் செலுத்த முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டாக்கலாம். பார்வையாளருக்கு நம்முடைய சேவையை பற்றியும், தயாரிப்பு பற்றியும் தெரியவில்லை என்றால், யாரும் அதனை வாங்க முற்பட மாட்டார்கள். சந்தைப்படுத்துதல் வல்லுநர்களுக்கு, ஒரு வணிகத்தையும், தயாரிப்பையும், சேவையையும் எவ்வாறு மக்களின் பார்வைக்கு எடுத்து செல்வது என்பதும், அதனை வெற்றிகரமான விற்பனையாக மாற்றுவதற்கான உத்திகளும் தெரியும். இந்த உத்திகளின் முடிவை பார்க்க சில மாதங்கள் ஆகலாம். ஆனால் இது நீண்டகால பலனளிக்கும் சரியான முதலீடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையால் டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதல் வல்லுநருடன் நமது வணிகத்தை வலுவாக்குவோம்.

Related Articles 
டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்
Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்
டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்
ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்
பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?


61 views0 comments